பகீர் சிசிடிவி வீடியோ.... இரும்பு கேட் விழுந்து குழந்தை உடல் நசுங்கி பலி!
மகாராஷ்டிர மாநிலத்தில் புனேவில் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது இரும்பு கேட் விழுந்து உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது.
ஒரு சிறுவன் வீட்டின் கேட்டை அடைக்கும்போது, எதிர்பாராதவிதமாக அந்த கேட் சரிந்து பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது. இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் உடனடியாகக் கத்தி கூச்சலிட்டு பெற்றோரை அழைத்தனர்.
On CCTV: Minor Girl Dies After Gate Falls On Her While Playing Near #Punehttps://t.co/C9StI2ENRV
— TIMES NOW (@TimesNow) August 1, 2024
அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து பெற்றோர் அந்த குழந்தையை கேட்டின் அடியில் சிக்கியிருந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தை உயிரிழந்ததும் பெற்றோர் கதறித்துடித்த காட்சி காண்பவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா