இனி குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!

 
செல்போன்

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சிறு வயதிலிருந்தே செல்போன் பார்ப்பதால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஸ்வீடன் அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனி செல்போன், டிவி பார்க்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு, 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் டிவி அல்லது செல்போன் பார்க்கலாம். இதற்குப் பிறகு, 6 ​​முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் செல்போன் அல்லது டிவி பார்க்கலாம்.

இதையடுத்து, 13 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள், தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே செல்போன் அல்லது டிவி பார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் தூங்கும் முன் செல்போன், டிவி பார்க்க வேண்டாம் என்றும், அவர்கள் பயன்படுத்தும் செல்போன், டேப்லெட் போன்றவற்றை படுக்கையறைக்கு வெளியே வைக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web