உறைய வைக்கும் வீடியோ... மேம்பால கட்டுமானத்திலிருந்து இடிந்து கார் மீது விழுந்த தூண்!

 
மேம்பால கட்டுமானத்திலிருந்து இடிந்து கார் மீது விழுந்த தூண்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் கட்டுமானப்பணிகள்  நடைபெற்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் மேம்பாலத்தில் இருந்து கான்கிரிட் பீம் இடிந்து கார் மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  அதன்படி மும்பையில் உள்ள மைராசாலையில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட் பீம் திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.  

A beam of concrete falls on a car in Mira Road from the ongoing metro work. The driver nearly escaped death.
byu/nyxxxtron inmumbai


இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் காரில் இருந்த ஓட்டுநர் அதிர்ச்சியில் கீழே இறங்கி வந்து காவல்துறையினருடன் புகைப்படங்கள் எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அத்துடன்  மேம்பாலத்தில் வெடித்துக் கொண்டிருக்கும் காங்கீரிட் பகுதி காணப்பட்டது. இந்த வீடியோவை வெளியிட்ட நபர் இச்சம்பவம் மும்பை மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் நடந்ததாக தெரிவித்துள்ளனர்.  
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில்  நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  சிலர் “அமெரிக்காவில் இப்படி நடத்திருந்தால், ஓட்டுநர் கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்றிருப்பார். ஆனால் இங்கு அவரே செலவு செய்ய நேரிடும்” என பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர் “இது விபத்து என்பதால், மேம்பால திட்டத்தை செயல்படுத்தி வந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web