இந்திய விமான படைக்கு ரூ.26,000 கோடி செலவில் போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்!
சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய கடற்படைக்கு 42 போர் விமானங்கள் தேவைப்படும் நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சுகோய்-30எம்கேஐ போர் விமானங்களுக்கு 240 புதிய இன்ஜின்களை வாங்க பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கோராபுட்டில் உள்ள ஆலையில் அவற்றை தயாரிக்க ரூ.26,000 கோடி ஒப்பந்தத்தைப் பெற உள்ளது.AL-31 Fb இன்ஜின்கள் 8 வருட காலத்திற்குள் வழங்கப்பட உள்ளன. இந்த விமான இயந்திரங்கள் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் 54 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாக இருக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் 240 இன்ஜின்களை வாங்குவதற்கான ஆர்டருக்கு அனுமதி அளித்துள்ளது. சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் இந்திய கடற்படையில் மிகவும் சக்தி வாய்ந்தது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா