முடிவுக்கு வரும் சென்னையின் 40 ஆண்டு கால அடையாளம் ... உதயம் தியேட்டர் இடிப்பு!
![உதயம்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/1a6e52f4fb46b5ae1cce2b53afbfd40f.webp)
80களில் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது உதயம் தியேட்டர். அந்த காலகட்டத்திலேயே இந்த தியேட்டரில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 திரையரங்குகளைக் கொண்டிருந்தது உதயம் காம்ப்ளக்ஸ். சென்னையில் சினிமா ரசிகர்களின் வருமானத்திற்கு தகுந்த பொழுது போக்கு மையமாக மல்டிபிளக்ஸ் அனுபவத்தைக் கொடுத்த தியேட்டர்களில் முக்கியமானதும் இதுதான். இந்த திரையரங்கம் ‘புஸ்பா 2’ படத்துடன் தனது 40 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொள்கிறது.
பிப்ரவரி 14ம் தேதியான காதலர் தினத்திற்குப் இந்த தியேட்டரை இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தியேட்டரில் முதன்முதலாக 1983ல் ரஜினியின் ‘சிவப்பு சூரியன்’ திரைப்படம் வெளியானது. அடுத்த படமாக வெளியானது ‘சட்டம்’. இதனைத் தொடர்ந்து வரிசை வரிசையாக ஆயிரக்கணக்கான படங்கள் வெள்ளிவிழாவைக் கொண்டாடி உள்ளன. காதலுக்கு மரியாதை, தளபதி, நாட்டாமை, படையப்பா, அவ்வை சண்முகி, கில்லி என பல படங்கள் 200 நாட்களை கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது. இதில் ‘படிக்காதவன்’, ‘சந்திரமுகி’ ஆகிய படங்கள் 275 நாட்கள் ஓடி சாதனைப் படைத்துள்ளன.
1979ல் இந்த மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸை கட்டத் தொடங்கி 1983லிருந்து இயங்க ஆரம்பித்தது. இதன் உரிமையாளர்கள் மொத்தம் 6 பேர். இவர்கள் அனைவருமே அண்ணன் தம்பிகள். அந்தக் காலத்தில் 70 எம்.எம். திரை வசதி இருந்த சில தியேட்டர்களில் உதயமும் ஒன்று. இந்த தியேட்டர் தொடங்கப்பட்ட போது இந்தப் பகுதிக்கு பேருந்து வசதியே கிடையாது.இரவு படம் முடிந்து செல்பவர்களுக்காகத் தனியாகப் பேருந்து வசதி தொடங்கப்பட்டது.
அந்தளவுக்கு ஒதுக்குப் புறமாக இருந்த அசோக் நகர், இன்று ஹாட் ஆஃப் த சிட்டி என்றால் ஆச்சரியமில்லை. முதன்முதலாக ரூ 2 டிக்கெட் விலையுடன் தொடங்கி படிப்படியாக இப்போது அதிகபட்சமாக ரூ 105 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏசி வசதி கொண்ட இந்த திரையரங்கில் கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த 4 தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் படிப்படியாக குறைய தொடங்கி விட்டது. இதே தியேட்டரின் அருகில் இருந்த ஸ்ரீநிவாசா ஏற்கனவே இடிக்கப்பட்ட நிலையில், காசி மட்டுமே இதுவரை செயல்பட்டு வந்தது தற்போது அதுவும் இடிக்கப்பட உள்ள நிலையில் சினிமா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!