சினிமாவை மிஞ்சிய சம்பவம்... அடுத்தடுத்து 4 ஆண்களுடன் திருமணம்... இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் !

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டை ஊராட்சி குளங்கரை தெருவில் வசித்து வருபவர் ஜீவா மகன் சிவசந்திரன். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது நிஷாந்தி தான் மருத்துவராக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக சிவசந்திரனிடம் அறிமுகம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிவசந்திரன்-நிஷாந்திக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதைக்கண்ட சீர்காழி அருகே புத்தூர் வாய்க்காங்கரை தெருவில் வசித்து வரும் தங்கராசு மகன் 34 வயது நெப்போலியன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் 2017ம் ஆண்டு மீரா என்ற பெயரில் இந்த பெண் தன்னிடம் அறிமுகமாக இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இதையடுத்து 2021ம் ஆண்டு சென்னையில் வசித்து வந்த போது மீரா ஒன்றும் சொல்லாமல் என்னை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவரை நான் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் மீரா சீர்காழியில் வசித்து வரும் ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே தன்னை ஏமாற்றிய மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி என்ற நிஷாந்தியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டதால் பெண்குழந்தையை இறந்து போன கணவரின் அண்ணன் ஜெயக்குமார் பராமரிப்பில் விட்டுவிட்டு, ஆண் குழந்தையுடன் கொடியம்பாளையத்தில் உள்ள இவரது அம்மா வீட்டில் தங்கி வசித்து வந்தார். அங்கு தனது பெயரை மாற்றிக் கொண்டு 2017ல் புத்தூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியனை திருமணம் செய்துவிட்டு 2021ல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ராஜாவிடம் தான் டாக்டர் என கூறி குடும்ப நடத்தி அங்கிருந்தும் தலைமறைவாகி உள்ளார். இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிஷாந்தி என்ற பெயரில் தன்னை ஏமாற்றிய பெண் குறித்து சிவசந்திரனும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல ஆண்களை பல பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட லட்சுமியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். ஒரே பெண் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!