மணிப்பூரில் மோதல்... 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
மணிப்பூரில் நீண்டகாலமாக நீடித்து வரும் மெய்தி–குகி இன மோதலின் பின்னணியில் இன்று அதிகாலை கடும் என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றது. மாநிலத்தின் கம்ஜொங் மாவட்டம் ஹனிப் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் ஆயுதத்துடன் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் துரத்திச் சென்றபோது, துப்பாக்கிச் சூடு பரிமாற்றம் நடைபெற்றது.

வனப்பகுதியில் சிலர் மறைந்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்த, அதில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்குப் பிறகு, எஞ்சிய பயங்கரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

மணிப்பூரில் 2023 முதல் இன மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு சில ஆயுதக்குழுக்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துள்ளதுடன், மாநிலத்தில் பாதுகாப்பு நிலை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
