கருப்பு பூஞ்சை மருந்து வாங்க 25 கோடி ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

 
கருப்பு பூஞ்சை மருந்து வாங்க 25 கோடி ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட தளர்வில்லாத ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் அதே நேரம் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. பல மாநிலங்களில் போதுமான மருந்துகள் இல்லாததால் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

கருப்பு பூஞ்சை மருந்து வாங்க 25 கோடி ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்துகள் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மாற்று மருந்துகள் மூலம் இந்த நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

From around the web