தூத்துக்குடியில் கலெக்டர் திடீர் ஆய்வு... 4 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு!
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் மற்றும் மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை விட்டு பேருந்து நிலைய பயணிகள் செல்லும் வளாகப் பகுதியில் சுமார் 5 அடி நீளத்திற்கு வெளியே பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர்
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நான்கு கடைகளுக்கு உடனடியாக சீல் வைத்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில் "பேருந்து நிலையத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து வியாபாரிகள் தங்கள் கடைகளை வாங்கி வியாபாரம் செய்து வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பு மற்றும் நோட்டீஸ் வழங்காமல் திடீரென இவ்வாறு சீல் வைத்துள்ளது அவர்கள் வியாபாரத்தை முற்றிலுமாக பாதித்துள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்பட்ட கடைகளை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!