காயல்பட்டினம் வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க கலெக்டருக்கு கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் துணைத் தலைவர் சதக்கத்துல்லாஹ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியின் தற்போதைய வார்டுகள் எண்ணிக்கை 18. மக்கள் தொகை 50,000+ மட்டுமே. இதுவே பல ஆண்டுகளாக தொடர்கிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிமுறைகள்படி50-60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் வார்டுகள் எண்ணிக்கை 30 என இருக்க வேண்டும்.
கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, தேர்தலுக்கு பிறகு வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற உறுதி மொழி அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 3 ஆண்டுகள் நிறைவுற்றும் அப்பணிகள் இதுவரை துவங்கவில்லை. இது சம்பந்தமாக எமது அமைப்பு - டிசம்பர் 15 அன்று நகரின் சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் எண்ணிக்கையை 30 என அதிகரித்து, வார்டுகள் மறுவரையறை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகர மக்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!