கல்லூரி மாணவி தற்கொலை: காதல் விவகாரமா? - போலீசார் விசாரணை!
புதுச்சேரியை அடுத்துள்ள பாகூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், காதல் விவகாரமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த பாகூர் சின்ன கரையாம்புத்தூரை சேர்ந்தவர் முருகானந்தம் (48). திருப்பூரில் உள்ள தையல் கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரது மனைவி மீராபாய். இவர்களுக்கு புவனேஸ்வரராஜ் (20) என்ற மகனும், இலக்கியா (19) என்ற மகளும் உள்ளனர். இலக்கியா கதிர்காமம் அரசு கலைக்கல்லூரியில் புள்ளியியல் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகானந்தம் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு டியூஷன் படிக்கும் போது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை இலக்கியா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊரான சின்ன கரையாம்புத்தூருக்கு இலக்கியாவை அழைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இலக்கியா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது முருகானந்தம் மகள் இலக்கியாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் செல்போனை இலக்கியா எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அருகில் வசிக்கும் மாமியாரை அழைத்து, வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது இலக்கியா மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கரையாம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் பிரச்சினையால் இலக்கியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
