புத்தாண்டில் அடுத்த அதிர்ச்சி... தொழில் வரி 35 சதவீதம் உயர்வு!

 
சென்னை மாநகராட்சி

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறை தொழில் வரி  செலுத்த வேண்டும். இந்நிலையில், 6 மாதத்துக்குள் ரூ.21000 வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரூ.21000லிருந்து   ரூ.30000 வருமானம் ஈட்டுபவர்களுக்கு தொழில் வரி ரூ.135-ல் இருந்து ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி

அதேபோல் ரூ.30,001 முதல் ரூ.45000 வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315லிருந்து ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதே போல் ரூ.45,001 முதல் ரூ.60000  வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690லிருந்து  ரூ.930 தொழில் வரி கட்ட வேண்டும் என்றும், ரூ.60,001 முதல் ரூ.75000 வரை  வருமானம் உள்ளவர்கள்  ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களும் பழைய வரியை கட்டினாலே போதும் என  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி

இந்த வரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதால்  இந்த அரையாண்டு உயர்த்தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web