IPL: ஆமதாபாத் அணி சூதாட்ட சர்ச்சை! விசாரிக்க பிசிசிஐ கமிட்டி!!

 
IPL: ஆமதாபாத் அணி சூதாட்ட சர்ச்சை! விசாரிக்க பிசிசிஐ கமிட்டி!!

ஐ.பி.எல் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகளில் புதிய வரவாக ஆமதாபாத் அணி வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த அணியின் நிறுவனர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிசிசிஐ கமிட்டி அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

IPL: ஆமதாபாத் அணி சூதாட்ட சர்ச்சை! விசாரிக்க பிசிசிஐ கமிட்டி!!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் புது அணியாக ஆமதாபாத் அணி பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆமதாபாத் அணியை, சி.வி.சி. கேப்பிட்டல்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆனால், அந்நிறுவனமானது வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சர்ச்சை தற்போது பூதாகரமாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 90-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா கூறியபோது, ‘ஆமாதபாத் அணியை வாங்கியுள்ள சி.வி.சி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் மீது எழுந்துள்ள சர்ச்சை குறித்து விசாரிக்க நடுநிலையான கமிட்டி அமைக்கப்படும்’ என்றார்.

IPL: ஆமதாபாத் அணி சூதாட்ட சர்ச்சை! விசாரிக்க பிசிசிஐ கமிட்டி!!

ஐ.பி.எல் அணிகளின் வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த சர்ச்சையின் காரணமாக புதிய அணி அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்குமா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

From around the web