கருணை அடிப்படையிலான பணி மனைவிக்கா? மாமியாருக்கா? குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த உயர் நீதிமன்றம்!
இறப்பிற்கு பின் கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியை மாமியாரின் பெயரில் பதிவு செய்திருந்த போதிலும், அந்த வேலை மனைவிக்கு வழங்க பரிசீலிக்கும்படி உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் வனத்துறையில் காவலாளியாக பணியாற்றியவர் கிஷண் சிங் தபோலா. இவர் 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன், தன்னுடைய பணியை மரணத்துக்குப் பின் கருணை அடிப்படையில் மாமியாருக்கு வழங்க வேண்டும் என அவர் முன்மொழிந்திருந்தார்.
அதன்படி, வனத்துறை தபோலாவின் மாமியாருக்கு பணி வழங்க முடிவு செய்தது. இதற்கு எதிராக தபோலாவின் மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின் போது, நீதிபதி “மாமியாருக்கு பணி வழங்க முடிவு எதற்காக எடுத்தது?” எனக் கேட்டார். இதற்கு வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தபோலா மற்றும் அவரது மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவியதால், அவர் மாமியாரின் பெயரை முன்மொழிந்திருந்தார்” என தெரிவித்தார்.
ஆனால் அரசு தரப்பிலான ஆவணங்களின் படி தபோலாவின் மரணத்துக்குப் பின் கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களும் அவரது மனைவிக்கே வழங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “தபோலாவின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து மூன்று மாதங்களுக்குள் பரிசீலித்து தீர்மானிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
