கம்பியால் அடிச்சும் சாகலை... கார் ஏற்றிக் கொன்றதாக வாக்குமூலம்!

 
ராஜ்குமார்

பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (41) என்ற பைனான்ஸ் அதிபர், ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான தகராறில் கம்பியால் தாக்கப்பட்டு, பின்னர் காரில் ஏற்றி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.வெள்ளகோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, உறவினரான ராஜ்குமார் உடன் சேர்ந்து முத்தூர் மற்றும் நம்பகவுண்டம்பாளையம் பகுதிகளில் நிலங்களை வாங்கி வீட்டுமனையாக பிரித்து விற்கும் ரியல் எஸ்டேட் வேலைகளும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைச் சுற்றி இருவருக்கும் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டதாம்.

பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த சக நண்பர்கள்

தீபாவளி பண்டிகை முடிந்து, பெங்களூரு திரும்புவதற்காக ஈஸ்வரமூர்த்தி தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியுடன் ஸ்கூட்டரில் வெள்ளகோவில் பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, வரக்காளிபாளையம் அருகே பின் புறம் வந்த காரொன்று ஸ்கூட்டரை மோதி கீழே வீழ்த்தியதாக கூறப்படுகிறது.அந்த காரை இயக்கியது ராஜ்குமார் என போலீசார் விசாரணையில் உறுதி செய்துள்ளனர். கீழே விழுந்த ஈஸ்வரமூர்த்தியை நோக்கி “இன்னும் உயிரோட இருக்கியா?” என்று கூச்சலிட்ட ராஜ்குமார், இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதாக சாட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னரும் கோபமடைந்த அவர், காரை முன்னும் பின்னும் இயக்கி ஈஸ்வரமூர்த்தி மீது ஏற்றி விட்டாராம்.

டெல்லி போலீஸ்

உடனே அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த அவரையும் தந்தை கிருஷ்ணமூர்த்தியையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, ஈஸ்வரமூர்த்தி உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, காரையும் இரும்பு கம்பியையும் பறிமுதல் செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜ்குமாரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.இந்த கொடூர சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!