இன்று மேகதாது திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்!

 
இன்று மேகதாது திட்டம் குறித்த  ஆலோசனை கூட்டம்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவம் ஒருபுறம் தீவிரமாகி வரும் வேளையில் மற்ற பிரச்சனைகளும் தலை தூக்க தொடங்கியுள்ளன.

அந்த வகையில் கர்நாடகத்தின் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கேபுதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை உள்ளடக்கிய பகுதியாக இருப்பதால் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டும் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ,

இந்நிலையில், மேகதாது திட்டம் குறித்து பெங்களூருவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில அரசின் அட்வகேட் ஜெனரல், நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகள், மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டு பிரச்சினையில் அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள், மூத்த வக்கீல்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web