கலெக்டர் வீட்டு சுவரை இடித்து தள்ளிய கண்டெய்னர் லாரி.. ஓட்டுநர் மீது பாய்ந்தது வழக்கு!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தர்மபுரியில் உள்ள கார் ஷோரூமுக்கு கண்டெய்னர் லாரியில் கார்கள் கொண்டு வரப்பட்டன. லாரியை மன்சூர் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, கார் ஷோரூமை விட்டு வெளியே சென்ற அவர், கார்களை இறக்குவதற்காக லாரியை ரிவர்ஸில் எடுத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கலெக்டர் குடியிருப்பு சுற்றுச்சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. விபத்தின் போது, கலெக்டர் இல்லம் முன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியை ரிவர்ஸில் எடுத்த டிரைவர் மன்சூர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!