தவெக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டி? தலைமைக் கழகம் திட்டவட்டம்!

 
ஈரோடு

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, 2013 ஜனவரி 4ம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து  கடந்த ஆண்டு பிப்ரவரி  இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

விஜய் தவெக மாநாடு

இந்நிலையில், அவரும் டிசம்பர் 14.ம் தேதி உடல் நல்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2 வது் முறையாக இடைத்தேர்தல் பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 ம் தேதி தொடங்கப்படும் எனவும்,  வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஜனவரி 17 எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக

வேட்புமனு பரிசீலனை ஜனவரி 18ம் தேதி  நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என கட்சித் தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும்   அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web