தொடர் மழை... குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. பயணிகளுக்கு தடை!

 
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக இடி, மின்னல் மற்றும் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. இன்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 67.50 மி.மீ. மழை பதிவானது.

இடி மின்னல் மழை

செங்கோட்டையில் 48.40 மி.மீ., குண்டாறு அணையில் 46.80 மி.மீ., கடனாநதி அணையில் 43 மி.மீ., ஆய்க்குடி, தென்காசியில் தலா 42  மி.மீ., ராமநதி அணையில் 36 மி.மீ., அடவிநயினார் அணையில் 35 மி.மீ., சிவகிரியில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது. இடி, மின்னல் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மழை நின்ற பின்னர் மின் விநியோகம் சீரடைந்தது.  

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 50.80 அடியாவும், ராமநதி அணை நீர்மட்டம் 59 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 51.51 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 101.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

மழை

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. விடுமுறை தினமான நேற்றும் சுற்றுலா பயணிகள் பலரும் குற்றாலத்தில் குவிந்த நிலையில், குளிக்க அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web