தொடர் விடுமுறை... இன்று முதல் நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பு!
இன்று முதல் தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை தினங்களாக அமைந்திருப்பதால் நேற்று மாலை முதலே பலரும் சொந்த ஊர் நோக்கி பயணப்பட துவங்கி விட்டனர்.
தென்மாவட்டங்களுக்கான ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில், ஆம்னி பேருந்துகளும் நிரம்பி வழிகின்றன. விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் இன்று முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
வழக்கமாக 8 பெட்டிகளுடன் இயங்கும் வந்தே பாரத் ரயிலில் இன்று ஜனவரி 11ம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை - நெல்லை 'வந்தே பாரத்' ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், திருவனந்தபுரம்-காசர்கோடு 'வந்தே பாரத்' ரயிலில் கூடுதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!