அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி பெண்ணுக்கு கருத்தடை சாதனம்... இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி பெண்ணுக்கு கருத்தடை சாதனம் பொருத்திய மருத்துவர்களைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் கருத்தடை சாதனம் பொருத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மருத்துவர்களின் அலட்சியத்தைக் கண்டித்து காவல்துறையில் புகார் அளித்த இந்து முன்னணி மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான குற்றாலநாதனை 10 நாட்கள் கழித்து பொய் வழக்கு புனைந்து காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், அவரை விடுவிக்க கோரியும் தூத்துக்குடியில் டூவிபுரத்தி்ல் உள்ள இந்து முன்னணி காரியாலயத்தின் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!