மீண்டும் சர்ச்சை.. வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் வண்டு.. விளக்கம் கொடுத்த அதிகாரிகள்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முருகன் மற்றும் கேடிசி நகர் பகுதியை சேர்ந்த சுடலை கண்ணு ஆகிய இருவரும் இன்று காலை திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயிலில் திருச்சி சென்றனர். ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளுக்கு இட்லி சாம்பார் வடை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் தரப்பட்ட உணவில் வண்டு இருந்ததாக பயணிகள் புகார். ரயில்வே அதிகாரிகள் சீரகம் மசாலா என பயணிகளிடம் விளக்கம்#VandeBharat | #Food | #IndianRailways pic.twitter.com/VCIoMhlfku
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 16, 2024
இந்நிலையில், கொடுத்த சாம்பாரில் 3 சிறிய வண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணி முருகன், ரயில்வே அதிகாரிகளை அழைத்து புகார் செய்தார். அதைப் பார்த்த அதிகாரிகள், அது வண்டு அல்ல, சீரக மசாலா என்று விளக்கம் அளித்தனர். சீரக மசாலாவில் தலை மற்றும் கால்கள் எப்படி உள்ளன என்று அந்த அதிகாரியிடம் பயணிகள் கேட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரயில் கட்டணம், உணவுக் கட்டணம் என ரூ.1040 வசூலிக்கும்போது, ஒப்பந்ததாரர்கள் தரமான உணவை வழங்க வேண்டும். தரமான உணவு வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது ரயில்வே அமைச்சகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!