சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுதா கொங்கரா!

சாவர்க்கர் பற்றிய பேச்சுக்கு இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்திய ஒரு பேட்டியில் இயக்குனர் சுதா கொங்கரா சாவர்க்கர் பற்றி பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பல நெட்டிசன்கள் சுதா கொங்கராவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். சாவர்க்கர் பற்றிய பேச்சுக்கு இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்; என் தவறுக்கு வருந்துகிறேன்.
என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில்…
— Sudha Kongara (@Sudha_Kongara) July 27, 2024
எனக்குப் பதினேழு வயதாக இருந்தபோது, பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் என்னிடம் கூறியதன் அடிப்படையில் அந்த நேர்காணலில் கூறி இருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக நான் அதன் உண்மைத்தன்மையை சோதித்திருக்க வேண்டும். அது என் மீது தவறு. எதிர்காலத்தில் இது நடக்காது என்று உறுதியளிக்கிறேன்.மற்றபடி, ஒருவரின் உன்னதப் பணிக்கான புகழை வேறொருவருக்குக் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எனது உரையில் உள்ள தவறான தகவல்களை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோருக்கு எப்போதும் தலைவணங்குவேன் என்றார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா