கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்... கலெக்டர் வேண்டுகோள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இந்த கால்நடை கணக்கெடுப்பு பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு உள்ளது.
நமது நாட்டின் கால்நடை வளம், கால்நடைகளின் இனம், பாலின விகிதம், கலப்பின விகிதம், வயது, கால்நடை வளர்ப்போரின் விகிதம், உற்பத்தி திறன் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடவும், நிதி மற்றும் மருந்துகள், கால்நடை தீவனம் போன்ற இடுபொருட்கள் ஒதுக்கீடு செய்யவும், கால்நடை அபிவிருத்திக்கான கட்டமைப்பு வசதிகள் செய்யவும் துல்லியமான கால்நடை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வது இன்றியமையாத பணியாகும்.
இந்த கால்நடை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான், கால்நடைகளுக்கான திட்டங்கள், கால்நடை மருந்தகங்கள், மருந்துகள், தடுப்பூசிகள், கால்நடை தீவனங்கள், நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்திகள், ஆய்வகங்கள் மற்றும் இதர இடுபொருட்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த கால்நடை கணக்கொடுப்பு பணிகள் ஒரு வரி விதிப்பு செயல்பாடு இல்லை. எனவே கால்நடை கணக்கெடுப்பு பணியாளர்கள் உங்கள் வீடுகளுக்கு வரும்போது, உரிய தகவல்களைத் தந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!