இந்தியாவில் 66 நாட்களுக்கு பிறகு குறையத் தொடங்கிய கொரோனா ! சுகாதாரத் துறை !

இந்தியாவில் 66 நாட்களுக்கு பிறகு குறையத் தொடங்கிய கொரோனா ! சுகாதாரத் துறை !

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 66 நாட்களுக்கு பிறகு குறையத் தொடங்கிய கொரோனா ! சுகாதாரத் துறை !

அதில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86498 பேர். இதுவரை இந்தியா முழுவதும் ஏற்பட்ட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.9கோடி. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.83 லட்சம் பேர்.

இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2.74 கோடி அதே நேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2123 பேர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3.31 லட்சம் பேர்.

இந்தியாவில் 66 நாட்களுக்கு பிறகு குறையத் தொடங்கிய கொரோனா ! சுகாதாரத் துறை !

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23.62 கோடி.இது தவிர குறிப்பாக இந்தியாவில் 63 நாட்களுக்கு பின்னர் இன்றுதான் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது .கடந்த 66 நாட்களில் பதிவான குறைந்தபட்ச ஒருநாள் கொரோனா பாதிப்பு இது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

From around the web