கொரோனா எதிரொலி! பள்ளிகள் மூடல்!

 
கொரோனா எதிரொலி! பள்ளிகள் மூடல்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும்பாலான மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா எதிரொலி! பள்ளிகள் மூடல்!


பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றோர்களின் விருப்பம் பெற்று முழு பரிசோதனைக்கு பிறகே பள்ளிக்குள் அனுமதிப் பட்டு வருகின்றனர்.


இருப்பினும் சில நாட்களாக அடுத்தடுத்து சில பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் ஈரோடு அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலி! பள்ளிகள் மூடல்!


இவர்கள் 4 பேரும் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளியில் உள்ள 220 மாணவர்கள், 37 ஆசிரியர்கள் மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளி வளாகம், வகுப்பறைகள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மாணவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

From around the web