பள்ளிகளில் கொத்தாக பரவும் கொரோனா!! 3 வது அலையா?

 
பள்ளிகளில் கொத்தாக பரவும் கொரோனா!! 3 வது அலையா?


இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கள் குறைந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் கொத்தாக பரவும் கொரோனா!! 3 வது அலையா?


இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 53 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதே போல் 22 கல்லூரி மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இது 3ம் அலையாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் மக்களிடையே பரவி வருகிறது.


இப்போதைய சமயத்தில் அதிகாரிகள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.தற்போதைய பாதிப்புக்களில் அதிகம் இருப்பது குழந்தைகள் தான் என்ற அதிர்ச்சி தரும் தகவலும் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் கொத்தாக பரவும் கொரோனா!! 3 வது அலையா?


ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா ஏற்பட்டதால் அப்பள்ளி மூடப்பட்டுள்ளது. ஒடிசாவை பொறுத்தவரை தற்போது 2,191பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் 1.45 கோடி என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

From around the web