குட் நியூஸ்!! 5 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி!

 
குட் நியூஸ்!! 5 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி!


கொரோனா தொற்றை விரட்டியடிக்க தடுப்பூசி செலுத்துவது ஒன்று தான் நிரந்தர தீர்வு என்று உலக நாடுகள் நம்புகின்றன இந்நிலையில், 5 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு பல நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்தந்த நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில் வல்லரசு நாடான அமெரிக்காவும் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி வருகிறது.

குட் நியூஸ்!! 5 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி!

இதனையடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் 90 சதவீதம் செயல்திறன் கொண்டவையாக அமைந்துள்ளன எனவும், இதுவரை ஆபத்தான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2.8 கோடி சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி கிடைக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

குட் நியூஸ்!! 5 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி!

பெரியவர்களுக்கு அளிக்கப்படும் தடுப்பு மருந்தில் 3ல் ஒரு பங்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் சீனா, சிலி, கியூபா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 5 முதல் 11 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web