ஊழல் விவகாரத்தால் வெடித்த போராட்டம்.. பதவியை ராஜினாமா செய்தார் செர்பிய அதிபர்!

நவம்பர் 1 ஆம் தேதி, செர்பியாவின் நோவி சாடில் ரயில் நிலையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் இறந்தனர். நிலைய புதுப்பித்தலில் ஊழல் நடந்ததாகக் கூறி நாடு தழுவிய போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக செர்பிய பிரதமர் மிலோஸ் வுசெவிச்சிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், செர்பியாவில் ஜனநாயக சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதாகவும், சர்வாதிகாரத்தை அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், செர்பிய பிரதமர் மிலோஸ் வுசெவிச் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். பிரதமரின் ராஜினாமாவை செர்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகு, அடுத்த 30 நாட்களுக்குள் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும், அல்லது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!