மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி! காயத்ரி செய்த கில்லாடி வேலை!!

 
மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி! காயத்ரி செய்த கில்லாடி வேலை!!

தமிழகத்தில் மட்டும் தான் சதுரங்க வேட்டை நபர்கள் ஏமாற்றி கொண்டு இருப்பார்கள் என்பது கிடையாது. வெவ்வேறு இடங்களில், வேறு வேறு பெயர்களில், பொய்யை உதிர்த்து சதுரங்க வேட்டை நடத்திக் கொண்டிருப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் வாங்கி தருவதாக கூறி தெலுங்கானாவில் பாஜக தலைவராக உள்ள காயத்தி என்பவர் சுமார் 60 லட்சத்திற்கும் மேலான பண மோசடி செய்துள்ளார்.

தெலங்கானாவில், கோகவரம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அந்த பகுதியின் பாஜக தலைவராக உள்ளார். இவரது கணவர் ஸ்ரீதர். இந்த தம்பதியினர் இருவரும் தெலுங்கு சினிமா பாடல்களுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டு பிரபலமடைந்துள்ளனர்.

இந்நிலையில்,கெளரிசங்கர் என்பவர், அவரது மகளுக்கு வெளிநாட்டு மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் வாங்கித் தருவதற்காக இவர்களிடம் சிபாரிசுக்கு சென்றிருக்கிறார். இந்த தம்பதியினர், தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், வெளிநாடுகளில் பல கல்லூரிகளில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் உங்கள் மகளுக்கு கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் வாங்கித் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி, வெவ்வேறு தவணைகளில் கெளரிஷங்கரிடம் இருந்து ரூ.44 லட்சம் வரையில் வாங்கியிருக்கிறார்கள்.

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி! காயத்ரி செய்த கில்லாடி வேலை!!

நாள் ஆக ஆக, தனது மகளுக்கு கல்லூரியில் இடமும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளனர். அதே போல், அரிசி ஆலை தொடங்குவதற்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக வெவ்வேறு நபர்கள் நான்கு பேரிடம் ஆளுக்கு தலா ரூ. 4 லட்சம் என வசூல் செய்து, அவர்களையும் ஏமாற்றியுள்ளனர்.

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி! காயத்ரி செய்த கில்லாடி வேலை!!

இதோடு நிற்காமல், அந்த பகுதியில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை ஒன்றின் நிர்வாகத்திடம், ஒன்றிய அரசின் அனுமதி பெற்று தருவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்துள்ளனர். இப்படி ஏமாற்றி வசூல் செய்த பணத்தில், சொகுசு கார், ஆடம்பர பங்களா என்று வசதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த மோசடி தம்பதியர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் தெரிவித்ததை அடுத்து காயத்ரி மற்றும் ஸ்ரீதரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web