வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவு... போலீசார் கண்முன்னே விஷம் குடித்த தம்பதி... கணவன் துடிதுடித்து பலியான சோகம்; மனைவிக்கு தீவிர சிகிச்சை!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்தால் கணவன்-மனைவி இருவரும், போலீசாரின் கண் முன்னே விஷம் குடித்தனர். இதில் கணவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, “தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பாதர் வெள்ளை தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் சங்கரன் (42). இவரது மனைவி பத்ரகாளி (42) பெயரில் உள்ள வீட்டை தூத்துக்குடியில் உள்ள நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து லோன் பெற்றுள்ளனர்.
லோன் தொகைக்கான கடனை சரியாக கட்டாததால் தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டை ஜப்தி செய்வதற்காக தனியார் நிதி நிறுவனத்தினர் வக்கீல் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் அவரது வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் சங்கரனின் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். இதனால் மனமுடைந்த சங்கரன்-பத்திரகாளி தம்பதியர் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தனர்.
உடனடியான அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். பத்திரகாளிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இது குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!