பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்.. உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

 
உச்சநீதிமன்றம்


 
இந்தியாவில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகளை வெடித்ததால் தில்லி, சென்னை உட்பட பெருநகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசு தில்லியில் பட்டாசு வெடிக்கும் நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தில்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.  

பட்டாசு

மேலும் தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை, முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை . இதனையடுத்து  தீபாவளியன்று, காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டியிருக்கிறது.    தில்லியில், பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை உடனடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உச்சநீதிமன்றம்

இந்த உத்தரவை உறுதி செய்வது யார் பொறுப்பு? இந்த தடை உத்தரவு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டதா? உடனடியாக இதனை விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.அதே நேரத்தில் இவை தொடர்வது உறுதி செய்யப்பட்டால் தில்லியில், காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் நிரந்தரமாக பட்டாசுக்குத் தடை விதிக்கப்படும் எனவும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web