1.50 கோடி நிலமோசடி... போலி ஆவணம் தயார் செய்தவரை தட்டித் தூக்கிய காவல்துறை!
விசாரித்தபோது, கீர்த்திகா என்பவர் சதீஷ் என்பவரிடமிருந்து கடந்த 2023ம் வருடம் கிரையம் பெற்றுள்ளதாக தெரிகிறது. சதீஷ் தான் முரளி என்பவரிடம் இருந்து கிரையம் பெற்றதாக தெரிவித்தார்.என் கணவர் 2018ல் இறந்துவிட்ட நிலையில், 2023ல் சதீஷ் என்பவருக்கு எப்படி கிரையம் செய்திருக்க முடியும்? ஆகவே போலி ஆவணங்கள் தயார் செய்து எனது கணவர் முரளி பெயரில் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இந்த வழியில் எனது சொத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஆள்மாறாட்ட முரளி என்பவர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து, உண்மையான முரளி போன்று ஆள்மாறாட்டம் செய்து தங்களுக்குச் சொந்தமில்லாத சொத்தை வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ.1.50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முரளி என்பவருக்கு உடந்தையாகவும், போலி கிரைய பத்திரத்தில் போலி சாட்சி கையெழுத்திட்ட மாதவரம் சாமி நகர் பகுதியில் வசித்து வந்த ஹரிகிருஷ்ணன் (எ) முகமது ரபிக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!