பல பெண்களிடம் எல்லை மீறல்.. இன்ஸ்டாகிராம் காமக்கொடூரன் அதிரடியாக கைது செய்த போலீசார்!

 
 முஜீப் அலி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு சிறுமி இன்ஸ்டாகிராம் செயலியை அதிகளவு பயன்படுத்தி வந்துள்ளார். தெரியாத இன்ஸ்டாகிராம் ஐடியிலிருந்து சிறுமிக்கு ஒரு நட்பு அழைப்பு வந்தது. அவள் அந்த நபருடன் நட்பாகப் பேசி வந்தார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் அந்தப் பெண்ணை சிறுமியை கூறினார்.  சிறுமி காதலை ஏற்க மறுத்துவிட்டாள். கோபமடைந்த நபர், ‘உன் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் அனுப்புவேன்’ என்று மிரட்டினார். மேலும், உடைகள் இல்லாமல் வீடியோ கால் செய்யுமாறு மிரட்டினார். பயந்துபோன சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

இது தொடர்பாக பெற்றோர் புதுச்சேரி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அந்த நபர் மீண்டும் சிறுமியைத் தொடர்பு கொண்டு, தான் கடலூர் வந்திருப்பதாகக் கூறி, ‘நீ கடலூர் வரவில்லை என்றால், உன் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் பரப்புவேன்’ என்று மிரட்டினார். அந்தப் பெண்ணுக்கு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அனுப்பினார்.

இந்த தகவலை சிறுமியின் பெற்றோர் சைபர் கிரைம் பிரிவு காவல் நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்தபோது, ​​ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி, தலைமை காவலர் இருசவேல், காவலர் அரவிந்தன், பெண் காவலர் கமலி ஆகியோர் கடலூர் சென்று சிறுமியை அழைத்து வரச் சொன்ன இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கு வந்த முஜீப் அலியை அவர்கள் பிடித்தனர். அந்த நபரின் தொலைபேசியை ஆய்வு செய்தபோது, ​​அதில் சிறுமியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: மன்னார்குடியைச் சேர்ந்த முஜீப் அலியை கைது செய்து விசாரித்தபோது, ​​பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன

அவரது மொபைலை ஆய்வு செய்தபோது, ​​2020 முதல் அவர் பல்வேறு பெண்களுக்கு இதுபோன்று அழைப்பு விடுத்து தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.அவர் ஒரு நண்பராகத் தொடங்கி, பின்னர் பல்வேறு பெண்களை வீடியோ அழைப்புகள் மூலம் ஆடியின்று தன்னிடம் வீடியோ காலில் பேச சொல்லி மிரட்டி, அவற்றைப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக, அவர் 10க்கும் மேற்பட்ட போலி இன்ஸ்டாகிராம் ஐடிகளையும், ஐந்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் ஐடிகளையும் பயன்படுத்தியுள்ளார். முஜிப் அலி சிங்கப்பூரில் பணிபுரிந்தார். டிப்ளோமா பட்டதாரியான இவர் சிங்கப்பூர் திரும்ப முயன்றபோது, ​​புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக பிடிபட்டார்.

அவரது மொபைல் போனில் 15க்கும் மேற்பட்ட பெண்களின் நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது மொபைல் போனை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். நேற்று மாலை அவரை தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காவலில் எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து, எஸ்எஸ்பி நாரா சைதன்யா கூறுகையில், "சமூக ஊடகங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் நட்பு கோரிக்கைகளை ஏற்க வேண்டாம். சமூக ஊடகங்களில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உண்மை இல்லை. நிர்வாண புகைப்படங்கள் எடுப்பதும் வீடியோ அழைப்புகள் செய்வதும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க வேண்டாம். சமூக ஊடகங்களில் ஏதேனும் மிரட்டல்கள் வந்தால், உடனடியாக உங்கள் பெற்றோர், காவல்துறை அல்லது நீங்கள் நம்பும் ஒருவரிடம் தெரிவிக்கவும். 1930 என்ற எண்ணை அழைத்து காவல் நிலையத்தை ஆன்லைனில் தொடர்பு கொள்வது முக்கியம்" என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web