கதறும் பெற்றோர்... பிளாஸ்டிக் தோலுடன் பிறந்த இரட்டை குழந்தைகள்.. அரிய வகை நோய் பாதிப்பு!
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு பிரசவத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் தோல் பிளாஸ்டிக் போன்று காணப்படும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் அவர்களை அந்நியக் குழந்தைகள் என்று அழைக்கிறார்கள். குழந்தைகளின் தோல் மிகவும் கடினமாக இருந்துள்ள நிலையில், அது பிளாஸ்டிக் போல இருந்தது. தோலில் பல இடங்களில் பிளாஸ்டிக்கில் காணப்படுவது போல விரிசல் தெரிந்தது.
இந்த நோய், ஒரு மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் அரிதான ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால் குழந்தையின் தோல் மிகவும் கடினமாகி, எதிர்காலத்தில், அவர் எழுந்து உட்காருவதற்கு கூட கடினமாகிவிடும் என்று கூறப்படுகிறது . அத்தகைய குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.
பெற்றோரின் மரபணுக்களில் ஏற்படும் குறைபாடு காரணமாக ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் நோய் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக குழந்தையின் தோல் கடினமாகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகைய குழந்தைகளுக்கு வளர்ச்சியடையாத கண்கள் மற்றும் கண்களுக்குப் பதிலாக தோலும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகள் வளரத் தொடங்கும் போது, உடல் வளர்ச்சியின் காரணமாக, கடினமான தோல் வெடிக்கத் தொடங்குகிறது மற்றும் வலி ஏற்படும். இருப்பினும், புதிய சிகிச்சையின் காரணமாக, பத்து சதவீத குழந்தைகள் இந்த நோயை ஓரளவு சமாளிக்க முடிகிறது. ஆனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தோல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!