டெலிகிராம் நிறுவனர் அதிரடி கைது... சரிவில் கிரிப்டோகரன்சி... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
உலகம் முழுவதும் பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக telegram இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியமான பாவெல் துரோவ் தற்போது பிரான்சில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சில் உள்ள போர் கேட் விமான நிலையத்தில் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் பாரிஸ் காவல் துறையினர் கைது செய்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதை பொருள் விநியோகம், மோசடி உட்பட பல குற்றசாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் சமீபத்தில் விந்தணு தானம் மூலமாக உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் உயிரியல் தந்தையாக இருக்கிறேன் எனவும் பரபரப்பு தகவலை கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
39 வயதான பாவெல் துரோவ், ரஷ்யாவில் பிறந்து தற்போது துபாயில் வசித்து வருகிறார். பாவெல் துரோவ், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரட்டை குடியுரிமையைப் பெற்றவர். பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலாய் இணைந்து 2013 ல் செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராமை நிறுவினர். டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை பெற்று முண்ணனியில் இருந்து வருகிறது.
🚨 BREAKING 🚨
— Ash Crypto (@Ashcryptoreal) August 24, 2024
THE FOUNDER & CEO OF TELEGRAM,
PAVEL DUROV, HAS BEEN ARRESTED
IN FRANCE.
TON IS DOWN 14% 🩸 pic.twitter.com/obDYNpdl58
சமீபகாலமாக டெலிகிராம், பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிக அளவில் பயன்படுத்தப் பட்டதாகவும் டெலிகிராம் தடையின்றி அனுமதிப்பதாகவும் தொடர் குற்றப்புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும், பயனர்களின் தகவல் விவரங்களை அரசுக்கு தெரியாமல் பாதுகாப்பதாகவும் டெலிகிராம் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் தான் தீவிரவாத இயக்கங்களுக்கு துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் துரோவ் கிரிப்டோகரன்சியையும் உருவாக்கியுள்ளார். தற்போது துரோவ் கைது செய்து வெளியானதும் டன்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 10 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!