உண்மையும் உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி தான்... நடிகை நயன்தாரா !

 
நயன்
 

மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட  "FEMI 9 MEGA CELEBRATION - 2025" நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டார்.  இந்நிகழ்ச்சியில்  பேசிய நடிகை நயன்தாரா, “நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், எப்படி நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் கவலைப்படாமல், நம் வேலையை உண்மையாகவும் உறுதியாகவும் செய்தால் தானாகவே self confidence வரும், அது நம் வாழ்க்கையை மாற்றிவிடும். யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும், தவறாக நடந்து கொண்டாலும், நேர்மையாக உழைக்க வேண்டும்.

நயன்

வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் விட்டுவிடக்கூடாது. உண்மையும், உழைப்பும் உயிருள்ள வரை நமக்கு இருந்தால் என்றுமே வாழ்க்கை மிகவும் வெற்றி நிறைந்ததாய் இருக்கும், தோல்வி இருக்காது” என பேசியுள்ளார்.  இந்நிகழ்ச்சியில் நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார் . விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாராவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.  நயன்தாராவை காண, ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்ததால்  அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. நயன்தாரா வருகையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web