க்யூட் வீடியோ... உடலை வளைத்து நெளித்து நடனம் ஆடும் ஜூனியர் என்.டி.ஆர்.!

தற்போதைய வாழ்க்கை முறையில் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் பல வைரலாகி வருகின்றன. அதிலும் விலங்குகள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட பல வீடியோக்கள் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. குழந்தைகள் என்ன செய்தாலும் ரசிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் வைரல் ஆகிறது. அதாவது ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளிவந்த தேவாரா திரைப்படத்தில் இடம்பெற்ற சுட்டமல்லே பாடலுக்கு பள்ளி குழந்தைகள் ஆண்டு விழாவுக்கு நடனம் ஆடுவதற்காக ஒத்திகை பார்த்துள்ளனர்.
அந்த நடனத்தில் பள்ளிச்சிறுவன் ஒருவன் ஜூனியர் என்டிஆர் போன்று உடலை வளைத்து நெளித்து அற்புதமாக நடனம் ஆடுகிறான். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! .