தமிழகத்தை நெருங்கும் புயல்... இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு  மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதே போன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நவம்பர் 6ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!

நாளை நவம்பர் 7ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 8ம் தேதி தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஒரிரு நாள்களில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்)உருவாகும் வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் கனமழை... வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது!

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவையொட்டிய கடலோர பகுதியில் வியாழக்கிழமை(நவ.7) சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் படிக்க செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web