தமிழகத்தை நெருங்கும் புயல்... வெதர்மேன் எச்சரிக்கை!

 
புயல்

தமிழகத்தை புயல் நெருங்கி வரும் நிலையில், புயல் தாக்கம் பெரிதாக இருக்குமா? எந்தெந்த மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமிருக்கும்? கனமழைக்கான வாய்ப்புகள் எந்தெந்த மாவட்டங்களில் என்று தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறுகையில், “வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல், சென்னை - நாகப்பட்டினம் இடையே, புதுச்சேரி, கடலுார் பகுதிகளில், 30ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இன்று காலையில் டெல்டா மாவட்டங்களில் மழை இருக்கும். இந்த அமைப்பு ஒரே இடத்தில் நிலை கொண்டு மெல்ல நகரும் என்பதால் இன்று பகலில் மழை இருக்காது. இன்று இரவு முதல் மழையின் தாக்கம் டெல்டா மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் இன்றிரவு முதல் மழையின் தாக்கம் அதிகரிக்கும்.

மழை

வடக்கு காற்று ஊடுருவல் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்று மழை ஓய்ந்து காணப்பட்டது. வடக்கு காற்று ஊடுருவல் குறையும்போது மழை அதிகரிக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வளி மண்டல வெவ்வேறு அடுக்குகளில், காற்று முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அமைப்பு புயலாக வலுவடைந்தாலும் அதன் தாக்கம் பெரிதாக இருக்காது. விரைவாக புயல் வலுவிழக்க வாய்ப்புள்ளது’ என்று அவர் கூறினார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், எதிர்பார்த்த திசையில் நகர்கிறது. ஆனால் அதன் வேகம் ஒரே சீராக இல்லை என தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் பகலில் மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன் தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் மணிக்கு 6 கி.மீ., வேகத்தில் நகர்ந்ததாக கூறப்படுகிறது.

மழை

இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் இதன் நகர்வு அமைந்துள்ளதாக வானிலை துறை வாயிலாக தெரிய வந்துள்ளது. இந்த வேக மாற்றத்துக்கான காரணங்களை வானிலை துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web