மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு... ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்!

 
சந்திரபாபு நாயுடு
 

மோந்தா புயலால் ஆந்திர மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புயல் தாக்கத்தால் ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.5,265 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆந்திரா

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நரசாபுரம் அருகே மோந்தா புயல் கரையை கடந்தது. இதனால் பிரகாசம், ஓங்கோல், கோனசீமா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்றால் பெருமளவு சேதம் ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. பல இடங்களில் கால்நடைகள் உயிரிழந்தன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா

அவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.1,000 நிதி உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் பவன் கல்யாண், கிருஷ்ணா மாவட்டம் ஆவினிகட்டா தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், அமராவதியில் உயர் மட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற மதிப்பீட்டு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
“புயல் காரணமாக கட்டிடம் மற்றும் சாலை மேம்பாட்டு துறையில் ரூ.2,079 கோடி, வேளாண் துறையில் ரூ.829 கோடி, தோட்டக்கலை துறையில் ரூ.39 கோடி, பட்டு நுல்துறையில் ரூ.65 கோடி என மொத்தம் ரூ.5,265 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.ஹுத் புயலின் போது பெற்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தொழில்நுட்ப உதவியுடன் மோந்தா புயல் பாதிப்பை குறைக்க முடிந்தது. மின் வாரியம், தீயணைப்பு, துப்புரவு, வருவாய் மற்றும் போலீசாரின் உழைப்பை சிறப்பாக பாராட்டுகிறேன்” என அவர் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!