சிடோ சூறாவளி எதிரொலி: பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு.. 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
மொசாம்பிக்

மொசாம்பிக்கை தாக்கிய சிடோ சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.  868 பேர் காயமடைந்துள்ளனர். சிடோ சூறாவளி மொசாம்பிக்கின் பல பகுதிகளை தாக்கியுள்ளது. இது நியாசா மற்றும் கபோ டெல்கடோ உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொசாம்பிக்

சூறாவளி மணிக்கு 160 மைல் வேகத்தில் காற்று வீசியது. புயலால் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். 868 பேர் காயமடைந்துள்ளனர். புயலால் 6.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கபோ டெல்கடோ மாகாணத்தின் மெகுபி மாவட்டத்தில் புயல் கரையைக் கடந்தது. சூறாவளி திங்கள்கிழமையும் நாட்டைப் பாதித்தது. கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.

மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் விழுந்தன. புயலால் இதுவரை 1.40 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் 170 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web