வங்கக்கடலில் காற்று சுழற்சி.. தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு!
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் சற்று குறைந்திருந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டலக் காற்று சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் டிசம்பர் 14-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலின் வடமேற்கு திசையில் நிலை கொண்டுள்ள வளிமண்டலக் காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, டிசம்பர் 14ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசையில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றின் காரணமாகக் காலையில் பனிப்பொழிவு தொடங்கி, குளிர்ந்த காலநிலையும் நிலவுகிறது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை (டிசம்பர் 10), தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். அத்துடன் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
