வருடத்தின் முதல் நாளே மகிழ்ச்சியான செய்தி... சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு!
இன்று புத்தாண்டு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அறிவிப்பாக சிலிண்டர் விலை குறைந்துள்ளது வணிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்துள்ளது. சிலிண்டர் விலையில் இந்த குறைப்பு இந்தியா முழுவதும் நடந்துள்ளது. புத்தாண்டின் முதல் நாள் காலையிலேயே எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
இன்று முதல் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் அதாவது 14 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இன்று ஜனவரி 1ம் தேதி முதல் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் ரூ.1804க்கு கிடைக்கும் வீட்டு உபயோக சிலிண்டரை பொறுத்தவரை எந்த மாற்றமும் இன்றி சென்னையில் ரூ818.50க்கு விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பாட்னாவில் ரூ.892.50க்கும், கொல்கத்தாவில் ரூ.829 க்கும், மும்பையில் ரூ.802.50 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிகரீதியான சிலிண்டர் விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டில் நிலவரங்கள்
1 டிசம்பர், 2024 - 1818.50
1 நவம்பர் 2024- 1802
1 அக்டோபர் 2024- 1740
1 செப்டம்பர் 2024- 1691.50
1 ஆகஸ்ட் 2024- 1652.50
1 ஜூலை 2024- 1646.00
1 ஜூன் 2024-1676.00
1 மே 2024-1745.50
1 ஏப்ரல் 2024-1764.50
1 மார்ச் 2024- 1795.00
1 பிப்ரவரி 2024- 1769.50
1 ஜனவரி 2024- 1755.50
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!