போலீசார் கண் முன்னாலேயே தலித் இளைஞர் கழுத்தறுத்து கொலை... உறவினர்கள் போராட்டம்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள கைகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரும், அருணுக்கு சொந்தமான அதே இடத்தில் வேலைப் பார்த்து வந்த நிலையில், தேவேந்திரனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காணும் பொங்கலன்று கைகளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகளின் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, தேவேந்திரன் மீது மணிகண்டன் கை களத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து தேவேந்திரனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைந்து சென்று, கை களத்தூர் காவல்நிலைய ஏட்டு ஸ்ரீதர் என்பவர் மணிகண்டன் இருக்கும் இடத்திற்கு தேவேந்திரனை அழைத்து சென்று, இருவருக்கும் இடையே சமாதானம் பேசிட முற்பட்டுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில், ஏட்டு ஸ்ரீதர் முன்னிலையிலேயே, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தை தேவேந்திரன் அறுத்துள்ளார். இதனால் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற போலீசார் தேவேந்திரனை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் கைளத்தூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மணிகண்டன் கொலைக்கு உரிய நீதி கேட்டு இறந்த மணிகண்டனின் உடலை காவல் நிலையம் முன்பு வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!