அடக்கொடுமையே... இப்படியெல்லாமா மரணம் நிகழும்?! அளவுக்கதிகமாக அரிசி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!

 
பள்ளி சிறுமி

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. அட கடவுளே... இப்படியெல்லாம் கூடவா மரணம் நிகழும் என்று  இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கின்றனர். இந்நிலையில், சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரிசி

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் மாலதி (11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமி மாலதிக்கு அடிக்கடி அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரிசி செரிமானம் ஆகாமல் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி

இதையடுத்து கடந்த ஜனவரி 27ம் தேதி சிறுமி மாலதியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) நவநீத கிருஷ்ணன் வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web