நண்பேண்டா.... சிவகார்த்திகேயன், சிம்புவை கட்டியணைத்த நடிகர் தனுஷ்!

 
சிம்பு தனுஷ்


 
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் முதல்வர் உட்பட பல அமைச்சர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் நயன்தாரா என  சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சிம்பு தனுஷ்

இந்நிகழ்வின்போது தனுஷ் நடிகர் சிவகார்த்திகேயனை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  அந்த விழாவில்  நடிகர் சிம்புவை சந்தித்த தனுஷ் அவரையும் கட்டியணைத்தார். தனுஷுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவுடன் பிரச்னை இருப்பதாகவே சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில்  இருவரிடமும் தனுஷ் நடந்துகொண்ட விதமும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் தனுஷ் நடிகர்கள் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

சிம்பு தனுஷ்
நடிகர் தனுஷ் தன் விவாகரத்துக்கு பிரச்னைகளுடன் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். பாடகி சுசித்ரா தனுஷின் நடவடிக்கைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். அதே போல் நடிகை நயன்தாரா தன் திருமணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த தனுஷ் ஒப்புதல் அளிக்கவில்லை என கடுமையான வார்த்தைகளால் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web