‘வீடே சுடுகாடா போச்சே..’ கதறிய மனைவி.... சித்ராவின் துப்பட்டாவிலேயே தூக்கில் தொங்கிய தந்தை... என்ன தான் நடந்தது?!

 
சித்ரா ஹேமந்த்

‘எத்தனை சந்தோஷமாக இருந்த குடும்பம்... இப்போ வீடே சுடுகாடாய் போச்சே...’ என்று நடிகை சித்ராவின் தாயார் கதறியழுது  அரற்றியது அங்கிருந்தோர் கண்களையும் குளமாக்கியது. இந்த கொடுமை எந்த குடும்பத்திற்குமே வரக்கூடாது.

தமிழகத்தில் கல்லூரி மாணவி சத்யபிரியா ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பம் மொத்தமே சிதறியது. அடுத்த நாளே அவரது தந்தை தற்கொலைச் செய்துக் கொண்டார். அவரது தாயாரும் உயிரிழந்த நிலையில், அவரது 2 சகோதரிகளுமே உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர். கிட்டத்தட்ட அப்படித்தான் நடிகை சித்ராவின் வீடும் மாறி இருக்கிறது. இது நிஜத்தில் பெருந்துயரம். எத்தனை சந்தோஷமாக சிறகடித்து பறக்க நினைத்திருந்திருப்பார் சித்ரா. அந்த குடும்பத்தின் அத்தனை சந்தோஷமும் ஒரு தற்கொலை முடிவால் நிலைக்குலைந்து போனது.

காமராஜ் தம்பதியருக்கு ஒரே மகள் சித்ரா. ஒரு மகள் என்பதால் நடிப்பதற்கு சம்மதிக்காமல் இருந்து வந்துள்ளனர். பெரும் போராட்டத்திற்குப் பின்னரே பெற்றோரிடம் சம்மதம் வாங்கியதாக சித்ரா பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில், மகள் சித்ராவின் அறையிலேயே அவரது துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தந்தை காமராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், ஹேமந்த் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஹேமந்தை விடுவித்தது. மகள் சித்ராவின் தற்கொலைக்கு பின்னரே மன அழுத்தத்தில் இருந்து வந்த சித்ராவின் தந்தை, ஹேமந்த் விடுதலைக்குப் பின்னர் அதிகளவில் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் சித்ராவின் துப்பாட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சித்ரா

ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பரில் பூவிருந்தவல்லி அருகே விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தந்தை நேற்ன்று தற்கொலை செய்துக்  கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவான்மியூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்படியும் மகள் மரணத்திற்கு நீதியைப் பெற்று விடுவேன். குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவேன்’ என்று கூறி வந்த காமராஜ், வழக்கில் இருந்து ஹேமந்த் விடுவிக்கப்பட்டதும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரது மனைவி கூறியிருக்கிறார். 

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல. மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என யாரிடமாவது  மனம் விட்டு பேசுங்க. தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்க. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web