செப்.23ம் தேதி தவெக முதல் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்... புஸ்ஸி ஆனந்த் உறுதி!

 
தவெக

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு செப்டம்பர் 23ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என  அக்கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விஜய் ரசிகர்களாலும், தவெக தொண்டர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பேசிய நடிகர் விஜய், மாநாட்டு விழாவில் கொடி குறித்து சுவாரஸ்ய தகவல்களைக் கூறுவதாக தெரிவித்திருந்தார். 

மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி என பல மாவட்டங்களில் மாநாடு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டதில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செப்டம்பர் 23ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், தங்கள் கட்சி மாநாட்டிற்கு பாதுகாப்புக் கோரி, அனுமதி வழங்கவும் விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் தவெக பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார். 

தவெக

மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில், அனுமதி கிடைக்காமல் இருந்தது பரபரப்பைக் கிளப்பியது. இது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த நிலையில், தவெக மாநாட்டு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என 21 கேள்விகளை காவல் துறையினர் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளனர். 

இந்நிலையில், விஜய்யின் தவெக மாநாடு தேதியை மாற்றி வைப்பது  தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அனுகியதாகவும், செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்த முடியாவிட்டால், ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாட்டை தள்ளி வைக்க கூறியதாகவும் செய்திகள் வெளியானது.  

செப்டம்பர் 23ம் தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று கட்சியினரிடமும், விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளிடமும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உறுதிபட தெரிவித்து, மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சுறுசுறுப்பாக பார்க்கச் சொல்லி உற்சாகப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web