பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

 
இந்தோனேஷியா
 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜாவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடம் செப்டம்பர் 29ம் தேதி  இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கி உயிரிழந்தனர்.

இந்தோனேஷியா
இதனையடுத்து கடந்த ஒரு வாரக் காலமாக மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை 80 சதவீத இடிபாடுகளை அகற்றி, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்டதாகப் பேரிடர் மீட்பு நிறுவனம்  தெரிவித்துள்ளது.


இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 13 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. இன்றைய நாள் முடிவிற்குள்  தேடுதல் பணி நிறைவடைந்து விடும் என  பேரிடர் மீட்பு அமைப்பின் துணை அதிகாரி புடி இரவான் தெரிவித்தார்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?